ண்டலம்

காஞ்சி காமகோடி பீட மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் தந்தை முக்கமல்லா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று மரணம் அடைந்தார்.

பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் முக்கமல்லா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் பெரிய வேத விற்பன்னர் ஆவார்.   இவர் ரிக் வேதத்தில் மிகவும் பண்டிதராக விளங்கினார்.   போளூர் மற்றும் காஞ்சிபுரம் வேத பாடசாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேதம் கற்பித்துள்ளார்.

இவருடைய மூன்று மகன்களான சங்கர நாராயணா, மற்றும் ரகு ஆகியோருக்கும் வேதம் கற்பித்துள்ளார்.   சங்கர நாராயணா என்பவர் தற்போதைய காஞ்சி மடத்தின் 70 ஆம் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆவார்.

தற்போது 92 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.   அவர் இந்துக்களின் புனித தினமான மகாளய அமாவாசையான நேற்று மரணம் அடைந்துள்ளார்.  இன்று அவரது சொந்த ஊரான தண்டலம் கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.