காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் நாளை முதல் இலவசம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


காஞ்சிபரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் திங்கள் கிழமை அதிகாலை பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோயிலின் பின்புற கோபுர பகுதியில் ரூ.50 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டை வாங்கிச் சென்றனர்.

கோயிலுக்கு வெளியே நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டன.

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரோப் கார், 3 சக்கர சைக்கிள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் நாளை முதல் இலவசம் என அறிவித்துள்ளார்.