விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகர்கள் 15 வருடம் கழித்து மீண்டும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

2006-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய இத்தொடர் 90’ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொலைக்காட்சி நிகழ்ச்சி என கூறலாம் .

அதில் நடித்த இர்ஃபான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, பிரியா அட்லீ, மோனிஷா, பாண்டி உள்ளிட்ட பல நடிகர்கள் திரையுலகில் நுழைய இந்தத் தொடர் முதல் படியாக இருந்தது.

இந்நிலையில் 15 வருடம் கழித்து, கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர்கள் ஒன்று கூடி, தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் இதன் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

[youtube-feed feed=1]