`மஹா’ படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ஹன்சிகா.

இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் மூன்று ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா ஏற்கனவே சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.