சென்னை: காமராஜர் 47வது ஆண்டு நினைவுநாளையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 47வது நினைவுநாளையொட்டி, நாடு முழுவதும் அவரது சிலை, உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியா செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காமராஜன் நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், எளிமையின் உருவம் – ஏழைப் பங்காளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாள்!

கல்விக்கண் திறந்தஅவரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது,

பெருந்தலைவரின் தொண்டுள்ளம் கொண்டு பொதுவாழ்வில் செயல்படுவோம்! என்று கூறியுள்ளார்.

காந்திய வழியில் கடமையாற்றிய காமராஜரை, 1954ல் முதலமைச்சராக அரியணை ஏற்றி மக்கள்அழகு பார்த்தனர். கடமையையே கல்யாணம் செய்து கொண்டவர். நெருக்கடியான சமயங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாய், எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர். சாமானிய மக்களின் துயர் துடைப்பவராய், அவர்களின் நிலையில் நின்று பிரச்னைகளை நோக்குபவராகவும் திகழ்ந்த காமராஜரை, மக்களுக்குப் பிடித்திருந்தது. பகட்டுகள் இல்லாத அந்த பச்சைத் தமிழன் அனைவரின் மனம் கவர்ந்தவராய் இருந்தார்.

காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளான இன்றைய தினத்தில் மறைந்தார். காந்தியத்தின் கடைசித் துாண் சாய்ந்து இன்றோடு 47 ஆண்டுகள் கடந்து விட்டது.

இன்று அவரது 47வது ஆண்டு நினைவு தினம்.