ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம்.

கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

போஸ்ட் புரொடக்சன் வேலைகளுக்காக காத்திருக்கும் இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து மார்ச் 14 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.