போபால்

த்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் ஆட்சியில் வேலையின்மை கடந்த 9 மாதங்களில் 40% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாடெங்கும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.  இந்த வேலையின்மை அனைத்துத் துறைகளிலும் உள்ளது.  குறிப்பாக வாகன உற்பத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது.  கடந்த சில நாட்களாகப் பல தொழிற்சாலைகளில் பலர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.   இது குறித்து மும்பையைச் சேர்ந்த இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் எனப்படும் ஒரு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது

இந்த ஆய்வின்படி மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் வேலையின்மை 7% ஆக இருந்தது.  தற்போது செப்டம்பர் மாத இறுதியில் அது 4.2% ஆகக் குறைந்துள்ளது.  ஆனால் இந்த மாதம் வேலையின்மை 8.1% ஆக அதிகரித்துள்ளது.   இதையொட்டி மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் அலுவலகத்தில் வெளியா குறிப்பில் மாநிலத்தில் 9 மாதங்களில் 40% வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டிவிட்டரில் வெளியான இந்தக் குறிப்பில் மத்தியப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து வ்ருகிரது.  கமல்நாத் அரசு வேலையின்மையை நீக்கி வருகிறது.  சுமார் 10 மாதங்களில்  அரசு வேலையின்மையை 40% குறைத்துள்ளது.  கடந்த 2018 ஆம் வருடம் 7% ஆக இருந்த வேலையின்மை தற்போது 4.2% ஆகக் குறைந்துள்ளது.  இது கமல்நாத்தின் திறமையான தலைமையால் கிடைத்ததாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.