சென்னை

ந்திய வரலாற்றில் மாபெரும் துக்கங்களில் ஒடிசா ரயில் விபத்து ஒன்று என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை சுமார் 580 பேர் உயிரிழந்துள்ளனர்.    நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்துப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது டிவிட்டரில்,

“ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்”

என்று தெரிவித்துள்ளார்.