சென்னை

ரிவாயு விலை உயர்வுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து தினசரி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.   இன்று முதல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.  இதற்கு எதிர்கட்சித் தலைவர்கள், பொது மக்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் டிவிட்டரில்,

பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.

என பதிந்துள்ளார்