சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய தோல் ஆராய்ச்சித்துறை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகம் அனுமதியளிக்க மறுத்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.