சென்னை:

டிகர் கமல்ஹாசன் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினல் இருந்து தங்களது கட்சியில் சேர வலியுறுத்தி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் மெயில் வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு கமல் கட்சியில் இருந்து மெயில் வந்திருப்பதாக செய்தியாளர்களிடம் காண்பித்து நையாண்டி செய்திருந்தார்.

இந்நிலையில், தனக்கும்  மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு மெயில் வந்திருப்பதாக எச்.ராஜா கொதித்துபோய் உள்ளார்.

நேற்று கமல் கட்சி சார்பில், தமிழிசைக்கு பதில் அளிக்கப்பட்டது. அப்போது, தங்களது மக்கள் நீதி மய்யம்  இணையதளத்தில் செல்போன் எண், இ-மெயில் மற்றும் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட விவரங்களை அளித்து தமிழிசை பதிவு செய்ததற்கான புகைப்பட ஆதாரத்தை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  தற்போது, எச்.ராஜாவும், தனக்கு  மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு இ-மெயில் வந்திருப்பதாக, அதை தனது டுவிட்டர் பதிவில்  பகிர்ந்துள்ளார்.

அதில,  ‘மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான் போல’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ராஜாவுக்கு அனுப்பட்டுள்ள  மெயிலில், ராஜாவின் பெயர் ஹெச்.ராஜா ஷர்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜாவின் பதிவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அதில், ராஜாவுக்கு தெரியாமல் அவரது அட்மின் அவரது பெயரை மநீம கட்சியின் வலைதளத்தில் பதிவு செய்திருப்பார் என பதிவிட்டுள்ளார்கள்.