சென்னை:
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் உடன் கூட்டணியை ஏற்படுத்தும் அடிப்படையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். ஆகவே இதன் வாயிலாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதியாகியிருக்கிறது.