சென்னை:
லகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா மற்றும் G.O.A.T மெஸ்சிக்கு வாழ்த்துக்கள். மார்டினசுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என பதிவிட்டுளார்.