ஈரோடு:

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தது அவரது மனிதேயத்தை எடுத்துக்காட்டுகிறது  என்று கமல் பாராட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுலிடம் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா என்று  கேட்கப்பட்டது. அதற்கு அவர் “முன்பு கோபத்தில் இருந்தோம். தற்போது மன்னித்துவிட்டோம்” என்றார்.
ராகுலின் கருத்தை அரசியல் கட்சிகள் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்  ஈரோட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம்.   ஆனால் நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு. மனிதநேயம் வேறு சட்டத்தின் தளர்வு வேறு” என்று தெரிவித்தார்.

மேலும், “கிறிஸ்துவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்வதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இதை கேட்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. தான்தோன்றித்தனமாக கேட்பவர்களுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது” என்று கமல் தெரிவித்தார்.