குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் – கமல்ஹாசன்

Must read

சென்னை:
குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதில் ஒன்று நாளை முதல் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆட்சியின்போது கொரோனா வைரஸ் காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான் என்பதும் குறிப்பாக முக ஸ்டாலின் அவர்களே தனது வீட்டின் முன் நின்று மதுக்கடைகளை திறப்பதற்கு எதிரான பதாகையை ஏந்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் அவரே என்று டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து வந்த கமலஹாசன் அவர்கள் மதுக்கடை திறப்பு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்.

More articles

Latest article