சென்னை:
தயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அரசியல், திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள்
நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள், என்று குறிப்பிட்டுள்ளார்.