இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக ‘நிர்பயம்’ என்ற தலைப்பிட்ட பாடல் ஒன்றை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.

இப்பாடலை கொச்சி மெட்ரோ நிலையத்தை சேர்ந்த காவலர் ஆனந்தலால் என்பவர் இயக்கியுள்ளார்.

இதற்கு சீருடையில் இருக்கும் ஒரு காவலர் இந்தப் பாடலை பாடியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இது போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு யோசனையை முன்னெடுத்தமைக்காக காவல்துறை உயரதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தலைவணங்குகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.