சென்னை:

டந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசன், கடுமை யான எதிர்ப்பை தொடர்ந்து, தனது பிரசாரத்தை 2 நாட்கள் ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்து உள்ளது.

4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிம் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அங்குள்ள இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரித்தபோது,  இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்துள்ளன.

இந்த நிலையில், நேற்று திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட கமல்மீது செருப்பு வீசப்பட்டது. அதையடுத்து தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்த கமல்ஹாசன், இன்று மீண்டும் அரவக்குறிச்சில் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.