கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 , விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ள நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து கமல்ஹாசன் தற்காலிகமாக விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கமல் விரைவில் கலந்து கொள்ள போகிறார். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சுமார் 10 நாட்களுக்கு ஓய்வு கொடுக்கப் போகிறாராம்.

கமல்ஹாசன் பங்கேற்கும் காட்சிகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி வரை படமாக்கப்பட உள்ளது. அதன் பிறகு, மீண்டும் பிக் பாஸ் குழுவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]