கொடுஞ்சாவுக்கு நிதியுதவி மட்டும் போதாது!: தமிழக அரசுக்கு கமல் கண்டனம்

Must read

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் பலியான விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழைநீரில் யுவஸ்ரீ, பாவனா என்ற 2 சிறுமிகள் கால்வைக்க…  மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

மின்சார ஒயர் அறுந்துகிடப்பதாக மின்வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,  ‘கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவுக்கு  அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேணடும்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article