தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருவது ஏ.வி.எம். இந்நிறுவனத்தை 1945-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கினார் ஏ.வி.மெய்யப்பன். இன்று (ஜூலை 28) அவருடைய 113-வது பிறந்த நாளாகும்.
ஏ.வி.மெய்யப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு கமல் ட்விட்டர் பதிவில்


“என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை ஏ.வி.மெய்யப்பனின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]