சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 12ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், அடுத்ததாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி ஆறு வழிகாக கல்லணை நோக்கி வந்துகொண்டிருக்கறிது. இது வரும் 15ந்தேதிக் குள் மாயனூர் கதவணை, மேலணை கடந்து ஜூன் 15ஆம் தேதி கல்லணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் 15ந்தேதி கல்லணையில் இருந்த விவசாய பாசனத்துக்கு முதல்வர் நீரை திறந்த விட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வரும் 15, 16ம் தேதிகளில் தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்யும் நிலையில், வரும் வழியில் 15ந்தேதி தேதி மகல்லணையில் நீரை திறந்து வைக்கிறார். இதையடுத்து, கல்லணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
கல்லணையில் நீரை திறந்து வைத்து மலர் தூவி காவிரி ஆற்று நீர் டெல்டா மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்துவதை நேரில் காண ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.