சென்னை; கள்ளக்குறிச்சி கலரவம் தொடர்பாக  ஏற்கனவே 4 பேர் மீது மாவட்ட ஆட்சியர் குண்டாஸ் போட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு குண்டாஸ் போடப்பட்டுள்ளவர்கனின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட  கலவரம்  காரணமாக, 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளி கட்டிங்களும் சேதப்படுத்தப்பட்டு ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வைரலாகின. இந்த வன்முறையில் மக்கள் அதிகாரம் அமைப்பு உள்பட சில அரசியல் கட்சிகளும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,  பள்ளி வாகனங்களை எரித்தது, பள்ளி அறைக்குள் புகுந்து, . மாணவர்கள் சான்றிதழ், வாகனங்களை எரித்து முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட தாக கூறப்படும் 4 பேர் மீது ஏற்கனவே  குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந் தநிலையில், தற்போது  மேலும் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. அதன்படி, சர்புதீன், சரண்ராஜ், லட்சாதிபதி, மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஏற்கனவே  கள்ளக்குறிச்சி கலரவத்தில்  26 சிறுவர்கள் உள்ளிட்ட 399 பேரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி அமர்வில் அளித்த மனுவில் ரத்தினம் உள்பட 70 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்ததுடன், இதனை வேறு ஒரு நாளில் முறையீடு செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை