சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கள்ளக்குறிச்சி தனியார்பள்ளி மாணவியின் மர்ம மரணம், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய 3 அமைச்சர்களை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்தார். அதன்படி அவர்களும் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வீட்டில் ஒய்வெடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமைசசர்கள், அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,  அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டிஉள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

 முன்னதாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீக்கிரையான சான்றிதழ்களை திரும்ப வழங்க வருவாய்த்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில்மகேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.