சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் விஷயச்சாராய சாவு எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 30பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயத்தை விற்பனை செய்தது திமுக பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50ஆக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் – மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். மேலும், கள்ளச்சாராயம், விஷச்சாராயங்கள் விற்பனையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.‘ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபர்களை, மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், “விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லருக்கு ரத்தத்தில் மெத்தனால் கலந்து இருப்பதால், அவர்களது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷச்சாராய விற்பனையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மாவட்ட கூறியுள்ளார்.
கடந்த 19ந்தேதி (புதன்கிழமை) அன்று நண்பகலில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அன்று மாலைக்குள் மேலும் 12 பேர் வரை உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வாந்தி, கண் எரிச்சல் போன்ற உபாதைகளுடன் நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுமார் 5 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 27 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 49 பேரை கள்ளச்சாராயம் காவு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாகபிள்ளை, பாலு வீரமுத்து, ராஜேந்திரன்- s/o கோவிந்தராஜன், ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை சேலத்தில் மொத்தமாக 15 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 32 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த இரு நாட்களாக கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் மற்றும் பலர் கள்ளக்குறிச்சி விரைந்தனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோகை சந்தித்து உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது. இது குடிகாரர்களை ஊக்குவிப்பதுபோல இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.