டெல்லி: இன்று (ஜூன் 21ந்தேதி)  சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார்.
இன்றைய தினம் சர்வதேச யோகா தினம் யோகாவை அங்கீகரித்த நாளாகும். இந்திய பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக யோக, உலக அளவில் கொண்டாடும் நிலை உருவானது.   இதுதொடர்பாக அவர் பலமுறை ஐ.நா. சபையையில் ஆதாரத்துடன் முறையிட்டார். இதையடுத்து,  மக்களின்  மன நலம் மற்றும் உடல்நலத்தை பேணும், பண்டைய இந்தியாவில் உருவான இந்த ஆரோக்கிய நடைமுறையை உலகளவில் மேம்படுத்துவது ஐ. நா. வால் முக்கியமானதாகக் கருதப்பட்டு, யோகாவை அங்கீகரித்தது.  இது 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  பொதுசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து  ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று  சர்வதேச  யோகா தினம் உலகம்  முழுவதும் கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டு 10வது சர்வதேச யோகா தினம்.
இன்று உலகம் முழுவதும் 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. “நமக்கும் சமுதாயத்திற்கும் யோகா” என்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும். தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நல்லிணத்தை மேம்படுத்துவது யோகா முக்கியப் பங்கு வகிப்பதை எடுத்துக்காட்டும் வகையில், இந்த ஆண்டு மையக் கருத்து அமைந்துள்ளது.  இதையொட்டி இந்தியாவின் பல பகுதிகளில் யோகா நிகழ்சிகள் களைகட்டி வருகின்றன. பிரதமர் மோடி உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் பல்வேறு யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்தியாவின் வாழ்க்கை முறையை பிரதிபலித்து வருகின்றனர். அதுபோல, கல்வி நிறுவனங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீர் மாநிலம்  ஶ்ரீநகரின் எஸ்கேஐசிசி-யில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றார். அவருடன்  ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதுபோல அங்குள்ள  புல்வாமா மைதானத்தில் மக்கள் யோகாசனம் செய்தனர்.
முன்னதாக சர்வதேச யோகா தினத்தையட்டி, பியோகாவின் பலன் பெருமளவிலான மக்களை சென்றடைய செய்யும் விதமாக ரதமர் மோடி,   அனைத்து கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கும்  கடிதம் எழுதியிருந்தார். அதில்,   முழுமையான ஆரோக்கியத்திற்கு, யோகா மற்றும் சிறு தானியங்கள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் சார்ந்த இயக்கமாக யோகா தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
டெல்லியில்  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ், ஒரு தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென சிறப்பு யோகா முகாமிற்கு ஏற்பாடு செய்தது. இந்த முகாமில், 550 மாற்றுத்திறனாளிகள், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி டெல்லி பாரகம்பா சாலையில் உள்ள மாதிரி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் பி எல் வர்மா, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
Photo and Videos: Thanks ANI