சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி  அதிமுக உறுப்பனிர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய சபாநயாகர், அவர்கள் இன்று ஒருநாள் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம்  இன்று 4வது நாளாக நடைபெறுகிறது.  இதையடுத்து இன்று  மூன்றாவது நாளாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, அ.தி.மு.கவினரை வெளியேற்றிய அவை காவலர்கள். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார்.

சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவித்தால் அ.தி.மு.க உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் என அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முயற்சிகின்றனர்” என்றவர்,  சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்று சொன்ன வீராதி வீரர்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..” 40/40 வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது; அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்னைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர். இதுகுறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள்  பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 40/40 வெற்றி பெற்றது அவர்களின் கண்களை உறுத்துகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடுகின்றனர் என கடுமையாக சாடினார்.