
தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம் தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பிற்க்காக அவர் கேரளா மாநிலத்தில் உள்ள மூணார் சென்றுள்ளார். மூணாரில் ஒரு சொகுசு விடுதியில் படக்குழுவினருடன் காளிதாஸ் ஜெயராம் தங்கியுள்ளார். அவர்கள் தங்கிய ஹோட்டலில் ரூம் ரெண்ட் மற்றும் ஹோட்டல் கட்டணம் உள்ளிட்டவைகள் அனைத்தும் ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.
அதனை கட்டாமல் படக்குழுவினர் ஹோட்டலை விட்டு வெளியேற முயற்சித்ததால் அவர்கள் அனைவரையும் ஹோட்டல் அதிகாரிகள் உள்ளேயே சிறை வைத்துள்ளனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு வந்த காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு உரிய கட்டணத்தை செலுத்த முன் வந்து செலுத்தியுள்ளனர். அவ்வாறு கட்டணம் செலுத்திய பின்னரே அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]