சென்னை:
தனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலி.பூங்குன்றன் செயல்படுவார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழக தலைவராக கி.வீரமணி பொறுப்பேற்றார்.
திராவிடர் கழகத்தின் கொள்கையின்படி தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற முடிவை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனக்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவராக கலி.பூங்குன்றன் செயல்படுவார் என கி.வீரமணி அறிவித்துள்ளார்.
கலி.பூங்குன்றன் திராவிட இயக்கத்தில் வீரமணியோடு நீண்ட காலம் தொடர்ந்து பயணித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel