கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை ஒரு மணி நேரத்தில் அகற்றப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி, ஏவுகனை நாயகன் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் கலாமுக்கு சிலை வைக்க அந்த பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்காக பணம் வசூலித்து கலாமின் மார்பளவு சிலை செய்து தயாராக வைத்திருந்தனர்.
நேற்று கலாமின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலையை திறக்க முடிவு செய்து அதற்காக போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகமிடமும் அனுமதி கேட்டனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக , திட்மிட்டபடி அபதுல் கலாமின் நினைவுநாளான,நேற்று சிலையை திறக்க முடிவு செய்தனர். பார்வையற்றோர் பள்ளியை சேர்ந்த மாணவர்களை வைத்து அவரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதையறிந்த போலீசார், அனுமதியின்றி சிலை வைத்ததாக சொல்லி, அப்துல் கலாம் சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றினர்.
சிலை திறந்து ஒரு மணி நேரத்திற்குள் அப்துல் கலாம் சிலை அகற்றப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.