
காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் விராட் கோலி, மகேஷ் பாபு, பிரபாஸ், சல்மான் கான், ஷாருக் கான், பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று (05.02.2020) நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காஜல் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். தனது மெழுகுச் சிலையுடன் காஜல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Patrikai.com official YouTube Channel