பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும், அவரது காதலர் கவுதம் கிச்லுவுக்கும் கடந்த 30 ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.
கல்யாணம் முடிந்த கையோடு, தனது பெயரை “காஜல் கிச்லு” என மாற்றிகொண்ட காஜல் அந்த பெயரில் விமானத்தில் பயணம் செய்து தேனிலவை கொண்டாட நேற்று முன்தினம் மாலத்தீவு புறப்பட்டு சென்றார்.
இந்த புது மண ஜோடி,,மாலத்தீவின் பல இடங்களில் நேற்று ஜாலியாக பொழுதை கழித்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“ஆஹா.. மாலத்தீவு எவ்வளவு அழகு” என்ற வர்ணனையுடன் காஜல் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே தனது திருமணம் குறித்து காஜல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “ஜனவரி மாதம் நானும், கவுதமும் நேருக்கு நேர் சந்தித்து பேசினோம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். கல்யாணம் செய்து கொள்வது குறித்து மே மாதம் என் பெற்றோரை கவுதம் சந்தித்து சம்மதம் வாங்கினார்.. ஜுன் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி