முடங்கிக் கிடக்கும் காஜல் அகர்வாலின் படங்கள்…..!

Must read

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது.

அதன்பின் அவர் நடித்த படங்கள் ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது ‘

பாரிஸ் பாரிஸ் : படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

ஹேய் சினாமிகா : திருமணத்தினால் தடைபட்டது . திருமணத்துக்கு பின் பாக்கி இருந்த காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இருப்பினும் அது கொரோனாவால் ரிலீசாகாமல் உள்ளது.

இந்தியன் 2 : படம் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

ஆச்சார்யா : படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், இப்போது கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் 2 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படங்களும் சில பிரச்சினைகளால் முடங்கி உள்ளன.

 

More articles

Latest article