கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்….!

Must read

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

கமல்ஹாசனுடன் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது .

அவரைத் தொடர்ந்து கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நடிப்பதற்கு லாரன்ஸ் ஆர்வம் காட்டிவருகிறார். ஆகையால், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்பட்டது.

திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொள்ள, தற்போது பகத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார் ஆண்டனி வர்கீஸ். இதனால் அவரை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

More articles

Latest article