காஜல் அகர்வால் படம் ஒடிடி தளத்துக்கு வருகிறது..

Must read

டந்த 2017 ஆம் ஆண்டு காஜல் அகர் வால் நடித்த படம் ’பாரிஸ் பாரிஸ்’. இப்படத்தை தமிழ் மற்றும் கன்னடத் தில் ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். படம் தணிக்கைக்கு சென்றதில் 25 வெட்டுக்கள் தரப்பட்டு யு / ஏ சான் றிதழ் வழங்கப்பட்டது.

படம் நீண்ட நாட்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ள நிலையிலும் கொரோனா ஊரடங் கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்ப தாலும் ’பாரீஸ் பாரீஸ்’ படத்தை OTT தளத்தில் வெளியிட அமேசான் பிரைம் வீடியோவுடன் பட தரப்பினர் பேச்சு பேச்சு வார்த்தைகளை தொடங்கி உள்ளதாக தெரிகிறது.
கங்கனா ரனாவத் நடித்த இந்தி திரைப்படமான ’குயின்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் பாரிஸ் பாரிஸ். தமிழைத் தவிர கன்னடம் (பட்டாம்பூச்சி), மலையாளம் (ஜாம் ஜாம்) மற்றும் தெலுங்கு (தட் ஈஸ் மகாலட்சுமி) என நான்கு மொழிகளில் குயீன் ரீமேக் செய்யப்படுள்ளது. ரமேஷ் அரவிந்த் இந்த படத்தின் தமிழ் மற்றும் கன்னட பதிப்புகளை இயக்குகிறார்.
இப்படத்தில் நடிப்பது பற்றி அப்போது பேட்டி அளித்த காஜல் அகர்வால்,’ நாங்கள் படத்தை தமிழில் தழுவி வருகிறோம். யாருடைய பாணியிலும் நடிக்க வரவில்லை. இந்த படத்தை எனது பாணியில்தான் நடிக்க உள்ளேன். இது மிகவும் சிறப்பு வாய்ந்த படமாக இருக்கும். இப்படத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியனின் வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார்’ என்றார்.
நடிகை காஜல் அகர்வால் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் நடிக்கிறார். கோரட்டலா சிவா இயக்குகிறார்.

More articles

Latest article