சென்னை:
பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதமா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெ.குரு நேற்றிரவு மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் சமூக நீதி போராளி காடுவெட்டி ஜெ.குரு அவர்கள் மறைந்தார்!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரோடும் அவரது சீரிய தலைமையைப் பெற்றிருந்த வன்னியர் சங்கத்தாரோடும் அவர் மறைந்த துக்கத்தையும் துயரையும் பகிர்ந்து கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.