பாமக தலைவர் காடுவெட்டி குரு கவலைக்கிடம்: அன்புமணி சிறப்பு வழிபாடு

Must read

பிப்ரவரி 1ந்தேதி பிறந்தநாளின்போது காடுவெட்டி குரு

சென்னை:

டந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

வன்னியர் சங்க தலைவரும், பாமகவை சேர்ந்த  முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெ.குரு நுரையீரல் தொற்று காரணமாக பல மாதங்களாக வீட்டில் இருந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 1ந்தேதி தனது 57வது பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடினார்.

இந்நிலையில், கடந்த 14ந்தேதி  அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தால், சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும்  அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாமக தொண்டர்கள், கோவில்களில், காடு வெட்டி குரு உடல் பெற்று நலமுடன் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

பாமக இளைஞர் அணி தலைவர்  அன்புமணி எம்.பியும் தனது மனைவி சவுமியா உடன்  வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று குரு உடல்நலம் வேண்டி  சிறப்பு வழிபாடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article