‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன்.

‘கடைசி விவசாயி’ படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. அமேசான், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களுக்குப் போட்டியாக சோனி லைவ் நிறுவனமும் விரைவில் களமிறங்கவுள்ளது.