தாணு என்றாலே பிரச்சினைதான் என்கிற ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் உண்டு. ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான “கபாலி”யிலும் அந்த பெயர் தொடர்கிறது.
அத்தனை தியேட்டர்களிலும் கபாலி,, அதீத விளம்பரம், அதிக விலைக்கு டிக்கெட்..  இப்படி சில நூறூ கோடி ரூபாய் அளவுக்கான புகார்கள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், பாவப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளபாக்கி வைத்திருக்கும் விவகாரமம் வெடித்திருக்கிறது.
ஏற்கெனவே,  தியேட்டர்களில் பாதகாப்புக்கு என்று பவுன்சர்களிடம் ஒப்பந்தம் செய்த தாணு,  அதற்கேற்ப நடக்கவில்லை என்று புகார். பவுன்சர்கள் தங்குவதற்குக் கூட வசதி ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் கொதித்துப்போன அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள தாணுவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இப்போது அடுத்த போராட்டத்துக்கு வேறு ஒரு தரப்பு தயாராகி வருகிறது. “கபாலி” படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு இதுவரை சம்பளம் செட்டில் செய்யவில்லையாம். ஏதோ கொஞ்சம் கொடுத்ததோடு சரி.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்கள், தங்களது யூனியனில் புகார் தெரிவிக்க தயாராகிறார்களாம். இந்த விவகாரத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தியாக கவர் செய்து வைத்துவிட்டது.
1
இதை அறிந்த தாணு தரப்பு, அந்த தொ.காவை தொடர்புகொண்டு, “செய்தியை வெளியிட வேண்டாம். உடனடியாக டெக்னீஷியன்களுக்கு சம்பளம் தந்துவிடுகிறோம்” என்று சொல்லியிருக்கிறது.
ஆனால் இப்போதுவரை  மீதமுள்ள சம்பளத்தொகை தரப்படவில்லை.
“கபாலியில் பணியாற்றிய தொழிலாளிகள், “ நூறு கோடி ரூபாய்க்கு படம் எடுத்து மூன்றே நாட்களில் 300 கோடி 500 கோடி ரூபாய் வசூல் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறது தயாரிப்பு தரப்பு.  ஆனால் கபாலியில் உழைத்த ஏழை தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை தர தாணுவுக்கு மனமில்லை.
இந்த விவகாரத்தில் ரஜினிதான் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால்,  மற்ற நடிகர்களை, தயாரிப்பாளரோ, இயக்குநரோ தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ரஜினியைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்துக்கும் அவர்தான் தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்கிறார். அதே போல படத்தின் வருமானத்திலும் அழருக்கு கணிசமான பங்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்..
லிங்கா படம் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட பிரச்சினையின்போது ரஜினிதான் விநியோகஸ்தர்களுக்கு பணம் கொடுத்தார்.
ஆகவே தனது கபாலி படத்தில் உழைத்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை பற்றிய பொறுப்பு ரஜினிக்கு  உண்டு. அவர்தான் தாணுவிடம் சொல்லி எங்களுக்கு உரிய சம்பளத்தைத் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏனென்றால்,  பவுன்சர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தாணு, அவர்களை தவிக்க விட்டார். அவர்கள், தாணுவின் அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டும் பலனில்லை. ஆகவே ரஜினிதான் எங்கள் சம்பள பாக்கியை வாங்கித்தர வேண்டும். இல்லாவிட்டால் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அனைவரும் சென்று எங்கள் சோகத்தைச் சொல்லப்போகிறோம்” என்கிற முடிவில் இருக்கிறார்களாம் தொழிலாளர்கள்.