கபாலி: பத்திரிகை டாட் காம் விமர்சனம்

Must read

பாலி விற்பனை, விளம்பரம் குறித்த செய்திகளை தள்ளிவைத்து, ஒரு படமாக பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, “அட்டகத்தி”, “மெட்ராஸ்” என்று கவனத்தை ஈர்த்த இரு படங்களை அளித்த இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம். அந்த எதிர்பார்ப்பு.
மலேசியாவில் கொத்தடிமையாக தவிக்கும் தமிழர்கள். வெகு எச்சரிக்கையாக, அந்தத் தமிழர்களை கொத்தடிமையாக்கி வாழ்வதும் தமிழரே என்பதாக காண்பித்திருக்கிறார்கள்.
அந்த அடிமைத் தமிழரை மீட்க ஆதிக்க தமிழரை எதிர்த்து போடுகிறார், ரஜினி எனும் “கபாலி” தமிழர். இதில் வெற்றி பெற்றாரா என்பதே கதை.
சினிமாவுக்கே உரிய பாணியில் சில  அடிப்படை தகவல்களை முழு சாப்பாட்டின் ஓரமிருக்கும் ஊறுகாய் போல தொட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் திண்டிவனம் பகுதியில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் மலேசியாவில் தோட்ட தொழிலாளர்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கபாலி ரஜினி.
aa
அங்கு, சீனர்களின் இனவெறியை எதிர்த்து போராடியதற்காகவும், சீனர்களுடன் சேர்ந்து, தமிழர்கள் சிலர் தாங்கள் செய்யும் போதை மருந்து கடத்தலுக்கு எதிராகவும் ரஜினி.. சரி, விடுங்கள்.
சதியால் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த ரஜினிகாந்த், சிறையில் இருந்து வெளிவருகிறார்.  ஆரம்ப காட்சி இதுதான். இத்தனை வருட  சிறை வாழ்விலும், வயதான பிறகும் அப்படியோர் வலு இருக்கிறது ரஜினியின் உடம்பில்.. ரஜினி அல்லவா!
வெளியே வந்த வேகத்தில் எதிரிகளை பந்தாட துடிக்கிறார். இடையில், காணாமல் போன தனது குடும்பத்தை தேடுகிறார்.
இறந்து போனதாக நினைத்துக்கொண்டிருந்த அவரது மனைவி, மகள் உள்ளிட்ட  உறவுகளை தேடிப்பிடிக்கிறார்.  அவர்களை   எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் சூழலில் தள்ளப்பட்டு, மீண்டும் ஒரு தாதாவாக மாறுகிறார் கபாலி.
பழைய விரோதிகளை பழிவாங்கி ஜெயிப்பது கதை.
1
டைட்டில் கார்டு போடும்போதே, வழக்கம்போல நட்சத்திர எழுத்துக்களில் ரஜினி பெயர் மின்னும் போது இது  ரஜினி படம் என உற்சாகமாகிறார்கள் ரசிகர்கள். தியேட்டரில் விசிலும், கைதட்டலும் அதிர்கிறது.
ஆரம்ப காட்சியில் சிறை மீளும் ரஜினி, ஜான் விஜய் உள்ளிட்ட தன் கூட்டாளிகளுடன்  வில்லனைத் தேடி வில்லனை தேடிப்போகிறார். வில்லனின் கையாள் நடத்தும் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையத்திற்கு (பெட்ஷாப்) செல்கிறார்.  அங்கே அவரை ரகளையாக போட்டுத்தள்ளுகிறார்.
தனது கூட்டாளி துப்பாக்கியை எடுக்கும்போது மெல்ல கையசைத்து தடுத்து, தானே எகிறி குதித்து, கூரை கம்பியில் தொங்கி எதிரியை தாக்கி துவம்சம் செய்கிறார்.
ரஜினி போதும்.. ராதிகா ஆப்தே ஹாசம் என்கிற அன்னக்கிளிக்கு வருவோம். குமுதவள்ளியாக நிறை மாத கர்ப்பிணியாக, பின் காதோர நரை நடுத்தர வயது பெண்மணியாக வரும் இந்த கிளியை நிச்சயம் ரசிக்கலாம். லயிக்கவைக்கும் அழகு, நடிப்பு.
ரஜினியிடம் இவர்,  “உன் கண்ண ரெண்டு நிமிஷம் பார்த்து  மயங்கிட்டேன் உன் சிரிப்பில  மூழ்கிப் போறேன், உன் கருப்பு கலர் அப்படிய எடுத்து என் உடம்பு முழுதும் பூச ஆசை” என்றெல்லாம் கனிமொழி பேசுவது சில்லிப்பு.
தன்ஷிகா, மெட்ராஸ் ரித்திகா, அட்டகத்தி தினேஷ் , மெட்ராஸ் கலையரசன், கிஷோர் நாசர், மைம் கோபி.. அனைவருமே பாத்திரமறிந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையில்,  நெருப்புடா …, நெஞ்சமெல்லாம் …, வீரத்துறந்திரா ….. உள்ளிட்ட பாடல்களை பார்க்கும்போது மயக்கவே செய்கிறது.
முரளியின் ஒளிப்பதிவில் ரஜினியின்  வாக்கிங், டாக்கிங் எல்லாமே ரஜினி ரசிகர்களுக்கு  விருந்து.
வசனங்கள் சில இடங்களில் பிரமிக்க வைக்கின்றன. “காந்தி சட்டையை கழட்டியதுக்கும்  அம்பேத்கர் கோட்டு போட்டதுக்கும் நிறைய வித்தியாசம், காரணம் இருக்கு” என்பது ஒரு உதாரணம்.
ரஜினியின் பிரம்மாண்டத்தைப் புரிந்து ஆரம்ப காட்சிகளை, ரசிகர்கள் விரும்பும் வகையில் வைத்த இயக்குநர் ரஞ்சித், அடுத்தடுத்த காட்சிளில் கோட்டவிட்டுவிட்டார்.
ரஜினி என்றால், ஆக்சனை விட காமெடியே பிரதானம். இதை ஏனோ ரஞ்சித் உணரவில்லை. மருந்துக்குகூட படத்தில் காமெடி இல்லை.
மலேசியா, தமிழ்நாடு என்றெல்லாம் வரும் காட்சிகள், அந்தந்த ஊர்தானா (நாடுதானா) என்பது தெரியவில்லை.
மலேசியாதான் கதைக்களம். ஆனால்,  மலேசியா என்றால், கே.எல், பெட்ரோனாஸ் டுவின் டவர் மட்டும்தான் என்று நினைத்துவிட்டார் போல.. இயக்குநர் ரஞ்சித். பிறகு அத்தனை நாள் மலேசியாவில் என்னதான் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
மலேசியான்னு நினைச்சிட்டாங்கபோல. அதே போ சென்னை என்றால்  கிண்டி லீ மெரீடியன் ஹோட்டலும் முடித்துவிட்டார்கள்.  கபாலி ரஜினி பாண்டிச்சேரி செல்லும்போதும்,  ஓட்டலிலேயே ( லீ கிளப்) முடித்தவிட்டார்கள். தாய்லாந்து காட்சிகளும் அப்படித்தான்.
தவிர மலேசியாவோ, மொட்டை மாடியோ.. ரஜினி வந்தால் சந்தோஷம்தான். ஆனால் இந்த படத்தில் ரஜினி, ரஜினியாக இல்லை. அதாவது முழுமையாக ரசிகன் விரும்படி இல்லை.  இது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
இன்னொரு பக்கம் யோசித்தால், இயக்குநர் ரஞ்சித்தின் முந்தைய இரு படங்களான அட்டைகத்தி, மெட்ராஸ் போலவும் இந்த படம் ரசிக்கவைக்கவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி, நல்ல இயக்குநர் ரஞ்சித்.. இருவரும் இணைந்து, தங்கள் அந்தஸ்தை இழந்திருக்கிறார்கள் இந்த படத்தில்.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. இருவருக்கும்!

  • விமர்சனம்: டி.வி.எஸ். சோமு

More articles

Latest article