“கபாலி” திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவதை தடை செய்யக்கோரி படத்தின் தயாரிப்பாளர் தாணு வழக்கு தொடுத்தார். இதையடுத்து திருட்டு இணையதளங்களை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது.
இதை மீறி கபாலி படத்தில் ரஜினி அறிமுகக் காட்சி, டைட்டில் காட்சி ஆகியவை இணையத்தில் வெளியாகின.
பொதுவாக திரைப்படங்களை, திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் Tamil rockers . com பக்கம் அனைவரின் பார்வையும் இருக்க…. தற்போது ஓசைப்படாமல் Tamilgun.com என்ற இணையதளத்தில் கபாலி முழு படமும் வெளியாகி விட்டது.
“பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கப்படும் நிலையில் இது போல திருட்டுத்தனமாக இணையங்களில் படங்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது” என்று சினிமா சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது போல் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவோரை பத்திரிகை டாட் காம் இதழும் கண்டிக்கிறது.