லகெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படம், திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகாமல் இருக்க தயாரிப்பு தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கவும் ஆணை பெற்றது.
ஆனால் நேற்று, காலை  கபாலி படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  நேற்று நள்ளிரவு, கபாலி படத்தின் டைட்டில் காட்சிகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இணைய திரைப்பட திருடர்கள், பகுதி பகுதியாக கபாலி படத்தை வெளியிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.   இது தயாரிப்பு தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.