"கபாலி" போஸ்டர் - தாணு
கபாலி” போஸ்டர் – தாணு

சென்னை:
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர்,  சென்னை 10-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது:
“பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு தனக்கு 2 லட்சம்  ரூபாய் தரவேண்டும்.  இது குறித்த வழக்கில், நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றம் 2 லட்சம் ரூபாயும் அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைப்புலி தாணு  வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில் இருக்கின்றன.  சமீபத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஆகவே, வசதி இருந்தும் பணம் தராமல், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் தாணுவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ – இவ்வாறு தனது மனுவில் டேவிட் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கணேசன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கலைபுலி தாணுவை வருகிற 28-ந் தேதிக்குள் போலீசார் கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு  ஒத்தி வைத்தார்.