ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் காஷ்மோரா படத்தை பற்றி நடிகர் கார்த்தி பேசுகையில்,
காஷ்மோரா படத்தை நாங்க எடுத்து முடித்து CG வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பாகுபலி ரிலீஸ் ஆனது, அந்த படத்தின் பார்த்தபின் எங்களுக்கு இன்னும் அதிக வேலைகள் இருக்கு என்பதை புரிந்து கொண்டோம். பாகுபலியோட கம்பேர் பண்ணும்போது எங்களுடையது ஏழை காஷ்மோராதான். ஆனால் படத்தின் குவாலிட்டியில் நாங்கள் எந்த குறையும் வைக்கமாட்டோம். அதுமட்டுமின்றி இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும்படி இருக்கும் என்றார் கார்த்தி.
முக்கிய குறிப்பு :- காஷ்மோரா படத்தில் மொத்தம் 3 கார்த்தியாம், இதுவரை இரண்டு கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்திவிட்டார்கள். ஆனால் அந்த மூன்றாவது கதாபாத்திரம் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். திரையில் பார்க்கும்போது கண்டிப்பாக நம்மை ஆச்சர்யப்படுத்தும் என்கிறார் இயக்குனர் கோகுல்.
Patrikai.com official YouTube Channel