சென்னை: திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி பிறந்தநாரளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின்  நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில்சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடனிருந்தனர்.

கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் தலைவராக கடந்த 1962ல் பெரியாரால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.