பெங்களூரு:
கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்திக்க உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இருந்து வருகியார்.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை கே.எஸ்.அழகிரி இன்று சந்திக்கிறார்.

பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.