சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். அவருடன் 34 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.
இதையடுத்து, எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் வகையில் மே 11ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது தற்காலிக சபாநாயகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 10ஆம் தேதி காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் மே 12ஆம் தேதி தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.