சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழ்ககில் இன்று தீர்ப்பு வெளியானது. பெங்களூரு தனி  நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  அதாவது சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளி என்று தீர்மானித்து தண்டனையை உறுதி செய்துள்ளது.

இது குறித்து கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தத் தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளது. தவறு செய்தது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது!” என்று தெரிவித்தார்.

இவர்தான் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக பல ஆதாரங்களுடனும் சட்ட தகவல்களுடனும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.