ஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தமக்குத் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவலை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தோஷகானா வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக ஏற்கனவே இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

இந்த நீதிமன்ற காவல் தற்போது 3-வது முறையாக 14 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் 10-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார். மேலும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷிக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.