டில்லி

யர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 1079 நீதி பணி இடங்கள் உள்ளன. இவற்றில் 669 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.   ஆகவே  தற்போது 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.  இதனால் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருகிறது.   இந்த காலி இடங்களில் 213 பேருக்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்தும் இன்னும் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் கே கவுல், கே எம் ஜோசப் ஆகியோரின் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “தற்போது கிடைத்துள்ள புள்ளி விவரங்களின் படி உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 1079 நீதிபதி பணியிடங்களில், 669 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.  மீதமுள்ள 410 காலியிடங்களில் 213 நீதிபதி பணியிடங்கள் அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

காலியாக உள்ள 197 பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றத்திடம் இருந்து பரிந்துரையை இன்னும் கொலீஜியம் அளிக்கவில்லை.  2019- ஆம் ஆண்டில், உயர்நீதிமன்றங்களுக்கு 65 நீதிபதிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருந்தது.   அதைப் போல் 2017- ஆம் ஆண்டில் 115 நீதிபதிகளும், 2018- இல் 108 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆகவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும்.  ஆறு மாதங்களுக்கு முன்பே பரிந்துரைகளை வழங்குவதற்கான முக்கிய பொறுப்பு உயர்நீதிமன்றத்தின் கொலீஜியத்துக்கு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.